கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மேல்குரியாமங்கலம் முருகன் கோவில் தெருவில் பிரியா- வீராங்கன் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களது கூரை வீடானது வீட்டிற்கு மேலே செல்லும் மின் கம்பிகள் எதிர்பாராமல் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பொறி கூரை வீட்டின் மீது பட்டு முழுவதுமாக எரிந்து சேதமானது. இதில் வீட்டில் உள்ள ஆவணங்கள், துணிமணிகள், பாத்திரங்கள், மர சாமான்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து கருகின. தீ மளமளவென பற்றி எரிந்து கொண்டிருந்தபோது தீயணைப்புத் துறையினருக்கு ஃபோன் செய்த போது அவர்கள் வீடு முற்றிலும் எரிந்து முடியும் வரை வரவேயில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். கொழுந்து விட்டு எரிந்ததீயை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அக்கம்பக்த்தினர் சேர்ந்து அணைக்க முயற்சித்தும் தீ கட்டுக்கடங்காமல் மொத்த வீட்டையும் சூறையாடிவிட்டது என்று வேதனையோடு தெரிவித்தனர். தங்களது வாழ்வாதாரத்திற்கு மாவட்ட நிர்வாகம்உதவி செய்ய வேண்டும் எனவும் வீட்டிற்கு மேலே செல்லும் மின்கம்பியை உயரமான அளவில் பொருத்தித் தர வேண்டும் எனவும் அவர்கள் வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது அக்கம் பக்கத்து வீட்டினரின் அரவணைப்பில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக