கடலூரில் போக்குவரத்து காவல் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
கடலூர் பகுதியில் ஷேர் ஆட்டோ மற்றும் அபே ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காவல்துறை சார்பில் ஷேர் ஆட்டோ மற்றும் அபே ஆட்டோகளில் 2 மற்றும் 5 என்ற எண் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று பேசி முடிவு எடுத்து அனைத்து ஆட்டோக்களிலும் ஸ்டிக்கர்கள் நீக்கப்பட்டது
இந்த நிலையில் இன்றைய தினம் திடீரென 30க்கும் மேற்பட்ட அபே ஆட்டோ டிரைவர்கள் கடலூர் போக்குவரத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் அப்பொழுது அபே ஆட்டோ டிரைவர்கள் வழியில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கும் ஆட்டோவில் உள்ள எண் ஸ்டிக்கர் அகற்ற வலியுறுத்தி போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போக்குவரத்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்ற போது போக்குவரத்து காவலருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பின்பு போக்குவரத்து காவலர்கள் உயரதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலந்து சென்றனர் திடீரென ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குறிஞ்சிப்பாடி செய்தியாளர் D.தனுஷ்
8667557062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக