ஜீன் 3: நாசரேத் பேரூர் திமுக கழகத்தின் சார்பாக கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் நாசரேத் பேரூர் திமுக சார்பாக கலைஞர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கே.வி.கே. சாமி சிலை, பேருந்து நிலையம் மற்றும் சந்தியில் தலைவரின் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அதன்பின் திருமறையுர் முதியோர் இல்லத்திற்கு காலை உணவும், பிரகாசபுரம் கருணை இல்லத்திற்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு நகர அவை தலைவர் கருத்தையா முன்னிலை வகித்தார், பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். முன்னாள் பேரூர் தலைவர் மாமல்லன், மாவட்ட பிரதிநிதி அன்பு தங்க பாண்டியன், மூக்குப்பேறி கிளை கழக செயாளர் அருள் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட வர்த்தகஅணி துணை அமைப்பாளர் செல்லத்துரை, நகர தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜகுமார் தலைவர் அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் உடையார். ஜெபகிருபை. சரவணன், மனோகரன்,
சிலாக்கியமணி, இளங்கோ, ஜெபசிங், சேகர், டேவின், ஏசாதுரை, அப்பாத்துரை, ஒன்றிய பிரதிநிதிகள், ஞானராஜ், ராமசந்திரன், தேவதாசன், முத்துக்குமார். மாணிக்கராஜ் மற்றும் வார்டு பிரதிநிதிகள் சதாசிவம், ராபின், ராஜாசிங் மணிகண்டன், ஞானராஜ், ஜஸ்டீன், மனோகரன், பால்ராஜ், ஜெபகுமார். ஐயப்பன், மம்மாலியோ டேவிட் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கலைஞர் வாழ்க என்ற ஒளியுடன் நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக