நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாள் விழா! பெ.வடிவேலு பங்கேற்பு!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாள் விழா! பெ.வடிவேலு பங்கேற்பு!!

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாள் விழா! பெ.வடிவேலு பங்கேற்பு!!
ராணிப்பேட்டை ,  ஜூன் 4

இராணிபேட்டை மாவட்டம்,நெமிலி கிழக்கு  ஒன்றியத்தின்  சார்பில் முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் 102வது பிறந்தநாள் நெமிலி பஸ் நிலைய த்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில்  பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை (ரொக்கம்) மாற்று திறனாளிகளுக்கு நல திட்ட உதவிகளும் திரளாக கூடியிருந்த மக்களுக்கும் அன்னதானம் வழங்கபட்டது. 
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருத் தலைவருமான பெ.வடிவேலு வழங்கி னார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, புருஷோத்தமன், ஜனார்தனன், ராகேஷ்ஜெயின் உள்ளிட்ட நிர்வாகிகள் நூற்றுகணக்கில் கலந்து கொண்டனர். முன்னதாக ஊர்வலமாக வந்து அண்ணா பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்இதுபோன்று அரக்கோணம் நகரம் பழைய பேருந்து நிலையத்தில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது 500 பேருக்கு பிரியாணி ஐஸ்கிரீம் இனிப்பு நகர செயலாளர். வில்ஜோதி வழங்கி னார். நிகழ்ச்சிக்கு தலைமையேற்று கொண்ட மாவட்ட பிரதி.ஆர்.கே.லிங்கம் ஏற்பாடுகளையும் கவனித்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad