ரூ 25 லட்சம் மதிப்பிலான நூலகத் திறப்பு விழா புத்தகங்களை சீர்வரிசை யாக கொண்டு வந்த எம் எல் ஏ!
திருப்பத்தூர், ஜூன் 4 -
திருப்பத்தூர் அருகே 25 லட்சம் மதிப்பி லான நூலக திறப்பு விழா நூலகத்திற்கு உண்டான புத்தகங்களை பள்ளி மாணவர் களை வைத்து சீர்வரிசையாக கொண்டு வந்த எம்எல்ஏ
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பேரம்பட்டு கிராமத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் அமைக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது அப்போது அந்த நூலகத்திற்கு தேவையான புத்த கங்களை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் பேரம்பட்டு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுடம் சீர்வரிசையாக கொடு த்து அதனை ஊர்வலமாக எடுத்து வந்து நூலகத்திற்கு வைத்தனர். அப்போது திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் இந்த நூலகத்தை பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் சிறந்த கல்வியாற்றல் பெறவேண்டும் என வாழ்த்தினார். மேலும் புரவலர் திட்டத் திற்கு மாவட்ட விவசாயிகளின் தொழி லாளர்அணி தலைவர் குலோத்துங்கன் ரூபாய் 1000 வழங்கி நன்கொடைகள் வழங்கி சிறப்பித்தார் இந்த நிகழ்வில் கந்திலி சேர்மன் திருமுருகன் கந்திலி ஒன்றிய செயலாளர்கள் மோகன்ராஜ், குணசேகரன் .மற்றும் பேராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவா சன். மாவட்ட நெசவாளர் அணி தசரதன். சுகுமார். ராஜா. கார்த்தி மற்றும் திமுக வின் முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என பல கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக