நாட்றம்பள்ளி அதிபெரமனூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் அமைச்சர் கே சி வீரமணி சாமி தரிசனம்!
திருப்பத்தூர் , ஜூன் 4
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அதிபெரமனூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் அமைச்சர் கே சி வீரமணி விழாவில் சிறப்புஅழைப்பாள ராக கலந்து கொண்டனர்.பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் 14வது வார்டு பேரூராட்சி வார்டு உறுப்பினர் அதிபர மனூர் அகர்பத்தி கம்பெனி உரிமையாள ருமான குருசேவ் அவர்கள் மரியாதை செலுத்தினார் பின்னர் ஊர் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அதே பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிமுக நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக