நெமிலி அருகே சையனபுரம் ஊராட்சியில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா! எஸ்.ஜி சி.பெருமாள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

நெமிலி அருகே சையனபுரம் ஊராட்சியில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா! எஸ்.ஜி சி.பெருமாள் பங்கேற்பு!

நெமிலி அருகே சையனபுரம் ஊராட்சியில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா! எஸ்.ஜி சி.பெருமாள் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , ஜுன் 4 -

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் கிராமத் தில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி பெருமாள் தலை மையில் முன்னாள் முதல்வர். முத்தமிழ் அறிஞர் கலைஞர், கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது   அவரது திருஉருவ படத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து 
கொண்ட மாவட்ட மகளிர் அணி துணை அமைப் பாளரும், ஊராட்சி குழு உறுப்பி னருமான சுந்தராம்பாள் பெருமாள் மாலை அணிவித்து மலர் தூவி 500 மீட்டர் ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் 500 பேருக்கு அன்ன தானம் வழங்கினார் .
பள்ளி மாணவ மாணவிகுழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரண ங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அவைத்தலைவர். நரசிம்மன், துணைச் செயலாளர். சீனிவாசன், எல்லப் பன், வழக்கறிஞர் ஜானகி, ராஜேஷ், சதீஷ் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad