மதுரையில் இருந்து இன்று முதல் (13.06.25) அபுதாபிக்கு இண்டிகோ விமானம் புதிய விமான சேவை துவங்கி உள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

மதுரையில் இருந்து இன்று முதல் (13.06.25) அபுதாபிக்கு இண்டிகோ விமானம் புதிய விமான சேவை துவங்கி உள்ளது.

 


மதுரையில் இருந்து இன்று முதல் (13.06.25) அபுதாபிக்கு இண்டிகோ விமானம் புதிய விமான சேவை துவங்கி உள்ளது.



அபுதாபியில் இருந்து 134 பயணிகள் மதுரை மன நிலையம் வந்தடைந்தனர் மதுரையிலிருந்து அபுதாபிக்கு 174 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.



திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் அபுதாபியில் இருந்து மதுரை வந்து மதுரையிலிருந்து மீண்டும் பயணிகளுடன் அபுதாபி புறப்பட்டு செல்லும்.

தற்போது மதுரையில் இருந்து இலங்கை துபாய் ஆகிய இரு வெளி நாடுகளுக்கு மட்டுமே விமான பயண சேவை நடைபெறுகிறது.


இந் நிலையில் மூன்றாவதாக மதுரையிலிருந்து அபுதாபி க்கு இன்டிகோ விமானம் தனது பயண சேவை துவக்குகிறது.


அபுதாபியிலிருந்து பகல் 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது.
இதில் அபுதாபியிலிருந்து 134 பயணிகளும்
மீண்டும். மதுரையிலிருந்து பயணிகளுடன் நண்பகல் 2.48 மணிக்கு அபுதாபி புறப்பட்டு சென்றது. மதுரையிலிருந்து 174 பயணிகள் அபுதாபி புறப்பட்டு சென்றனர்.


பொதுவாக புதிய விமான சேவை துவங்கும் போது விமான நிலையத்தில் தண்ணீர் பீச்சி வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.


நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால் வரவேற்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் அபுதாபிக்க்கான புதிய விமான சேவை மதுரை விமான நிலையத்தில் துவங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad