முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மானாமதுரையை சேர்ந்த அமமுக நிர்வாகிகள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்த வழக்கறிஞர் திரு சுரேஷ் அவர்கள் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமமுக கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொது செயலாளர் திரு கே. எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி, வாழ்த்துக்கள் பெற்று கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வின்போது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு பி. ஆர். செந்தில்நாதன், மானாமதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜ், அதிமுக கட்சி நிர்வாகிகள், அமமுக கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்ட சுரேஷ் மற்றும் மாற்றுக் கட்சி நிர்வாகிகளுக்கு, கட்சியில் சிறப்பாக பணியாற்ற அதிமுக சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக