மானாமதுரை அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரை கொடுக்கப்பட்டதால் கடும் அவதிக்குள்ளான நோயாளி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

மானாமதுரை அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரை கொடுக்கப்பட்டதால் கடும் அவதிக்குள்ளான நோயாளி.


மானாமதுரை அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரை கொடுக்கப்பட்டதால் கடும் அவதிக்குள்ளான நோயாளி. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள மிளகனூர் கிராமத்தை சேர்ந்த சிவா பகத்சிங் என்பவர் காய்ச்சல் மற்றும் வயிற்று வலி காரணமாக மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மாத்திரையை உட்கொண்ட சிவாவுக்கு மேலும் வயிற்று வலி அதிகமாகி உள்ளது. மேலும் கொடுக்கப்பட்ட மாத்திரை அட்டையில் உள்ள காலாவதி தேதியை பார்த்து சிவா பேரதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த அட்டையில் 2025 ஆண்டு நிறைவடைந்த மாதம் வரை மட்டுமே செல்லுபடி ஆகும் என்று இருந்துள்ளது. அதனையடுத்து மாத்திரை அட்டையுடன் மருந்தாளரை சந்தித்து காலாவதியான மாத்திரையை ஏன் கொடுத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு மருந்தாளர் அலட்சியமாக பதில் கூறியுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை சீப் மெடிக்கல் ஆபிஸரிடம் கேட்டபோது காலாவதியான மாத்திரையை மருந்தாளர் கொடுத்திருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தினசரி 500க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்லும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் இது போன்று காலாவதியான மாத்திரைகளை வழங்கி வருவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காலாவதியான மாத்திரையை தான் கொடுக்கிறோம் என்ற சுயநினைவு கூட இல்லாமல் அரசு ஊழியராக பணியாற்றுவதற்கு எந்தத் தகுதியும் அந்த மருந்தாளருக்கோ, அந்த மருந்தாளரின் செயல்பாடுகளை கண்காணிக்க தவறிய மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு, துறைரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறையை புறநோயாளிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad