இருசக்கர வாகன நிறுத்துமிடமாக செயல்பட்டு வரும் மானாமதுரை புதிய பேருந்து நிலையம், இருசக்கரங்களால் விபத்துகளை சந்திக்கும் பேருந்து பயணிகள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்படுவதற்கான அடுக்குகளில் பேருந்துகளை நிறுத்தாமல் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அடுக்குகளில் இருசக்கர வாகனங்கள் அலை மோதுவதை காண முடிகிறது. மேலும் புதிய பேருந்து நிலையம் முன்புறமாக இருசக்கர வாகன நிறுத்துமிடம் செயல்பட்டு வருவதை பொதுமக்கள் உணராது பேருந்து நிலையத்திற்குள் அதுவும் பேருந்து நிறுத்தும் இடமான அடுக்குகளில் மனசாட்சியின்றி தங்களுடைய இருசக்கர வாகனங்களை நிறுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து துறையினர் விதிமீறல்களில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களுக்கு அபதாரங்களை விதித்து பெரும் விபத்துகளை தவிர்த்து, போக்குவரத்தை சீர் செய்திட வேண்டுமென பேருந்து பயணிகள் தெரிவித்தனர். கூடுதலாக இப்பேருந்து நிலையத்தில் மின்விளக்குகள் மின்விசிறிகள் சரியாக செயல்படுவதில்லை. அடுத்ததாக வெள்ளரிக்காய் உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பவர்கள் பூக்கடை நடத்துபவர்கள் பேருந்து நிலையத்திற்குள் பயணிகள் அமர்வதற்கு கூட இடமின்றி ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொதுமக்கள் சிலர் கூறுகையில், மானாமதுரையில் பழைய பேருந்து நிலையம் என்ற ஒரு இடம் உள்ளதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பேருந்து நிலையம் ஆனது செயல்பாடு இன்றி பேரளவில் பழைய பேருந்து நிலையம் என்று கருதப்பட்டு வருகிறது. ஏனென்றால் இந்த பழைய பேருந்து நிலையம் வழியாக எந்த ஒரு பேருந்தும் பெயரளவில் கூட இயக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் ஆட்டோவிற்கு அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க நேரிடும் அவளை சூழ்நிலை உருவாகியுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க பேருந்துகளை பழைய பேருந்து நிலையம் வழியாக போக்குவரத்து துறையினர் அனுமதிக்காதது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட பெயரளவிலாவது பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், மாணவ, மாணவிகள், பெண்கள், முதியவர்கள், குறிப்பாக மானாமதுரை ரயில் நிலையம் செல்லும் பயணிகளுக்கு வசதியாக குறைந்தபட்சம் ஒரே ஒரு அரசு நகர பேருந்தை சென்றுவர போக்குவரத்துத்துறை வழிவகை செய்திட வேண்டுமென பேருந்து பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக