கோவை, க.க சாவடி பகுதியிலுள்ள தானிஷ் அஹமத் தொழில்நுட்பக் கல்லூரியில் சுழற்சங்கத்தின் மாணவர்கள் அமைப்பு துவங்குவதற்கான கருதரங்கமானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சுழற்சங்க அமைப்பின் தலைவர் ரோடெரியன் திரு. எ . ராம்குமார் அவர்களும் சுழற்சங்க அமைப்பின் பயிற்றுனர் ரோடெரி சுபாஷ் அவர்களும் கலந்துகொண்டு சுழற்சங்க மாணவர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினர். சுழற்சங்க மாணவர் அமைப்பின் வாயிலாக கல்லூரியில் பயில்கின்ற மாணவர்களுக்கு ஆளுமைத்திறன், பேச்சாற்றல், குழுவிவாதம், மேடைப்பேச்சுகள் போன்றவற்றில் பங்கு பெறுவதற்கு வழிகாட்டியாய் அமைந்தது.
அதுமட்டுமல்லாது சமூகத்தின்பால் ஈர்பு கொண்டு நீர்மேலாண்மை, மரம் நடுதல் , மாசுக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த அமைப்பு மிகவும் பயனுடையதாக இருந்தது.
எந்நிகழ்விற்க்கு கல்லூரியினுடைய நிர்வாக இயக்குனர் கே.ஏ. அக்பர் பாஷா தலைமை தாங்கினார் மற்றும் தலைமை நிர்வாக செயலதிகாரி அ. தமீஸ் அஹமது முன்னிலை வகித்தார். இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.ஜி.பார்திபன் வரவேற்புரை ஆற்றினார். மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் கெ. முரளிதரன் நன்றியுரை கூறி நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக