ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 132 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி தமிழகத்தில் மருத்துவ இளங்கலை எம். பி. பி. எஸ், படிப்பதற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் ஈரோடு மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நீட் தேர்வு எழுதிய 46 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த ஆண்டு இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதியவர்களில் 86 மாணவ - மாணவிகள் என மொத்தம் 132 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு அரசின் இட ஒதுக்கீடு(அரசு பள்ளியில் 6-ம் முதல் பிளஸ் - 2 வரை படித்தவர்கள்) என்ற அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் இவர்களுக்கு எம். பி. பி. எஸ் சீட் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம. சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக