ஈரோடு: விசைத்தறி உரிமையாளர்கள் புகார் : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 ஜூன், 2025

ஈரோடு: விசைத்தறி உரிமையாளர்கள் புகார் :


தமிழகத்தில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணை வெளியிட்டு இரு மாதங்கள் கடந்தும் உற்பத்திக்கான நூல்களை வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் காத்திருப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக நியாயவிலைக் கடைகள் மூலம் அரசின் இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது.


இதற்காக ஆண்டுதோறும் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக 680 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணை முன்கூட்டியே வழங்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான நூல்கள் உடனடியாக வழங்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இரு மாதங்கள் கடந்தும் இதுவரை இலவச வேட்டி சேலைக்கான உற்பத்திக்கான (பாவு, ஊடை) நூல்களை அரசு இதுவரை வழங்காததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழக்கும் சூழல் இருப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad