தாராபுரம் அருகே சாலையில் காட்டு மான் அட்டகாசம்! - வனத்துறையிடம் பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 ஜூன், 2025

தாராபுரம் அருகே சாலையில் காட்டு மான் அட்டகாசம்! - வனத்துறையிடம் பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை கோரிக்கை.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில், மனக்கடவு பழனி செல்லும் சாலையில் இன்று காலை அரிய காட்சி ஒன்று பார்க்கப்பட்டது. சுமார் எட்டு வயது மதிப்புள்ள ஒரு காட்டு மான், வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையை திடீரென கடந்தது. இதன் பின்னர் அந்த மான் சாலையின் ஓரமாக நீண்ட தூரம் ஓடி சென்றது.

அச்சமையத்தில் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதனை கண்டு ஆச்சரியமடைந்து, அவர்களது மொபைல் போன்களில் அந்த காட்சியை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.


சற்று வியப்பான விஷயம் என்னவென்றால், இந்த பகுதி முற்றிலும் வறட்சியானது; அருகில் அடர்ந்த காடுகள் எதுவும் இல்லை. எனவே இந்த மான் அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தது என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.


இதனை அறிந்த பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக வந்து அப்பகுதியில் ஆய்வு செய்து, மானை பாதுகாப்பான இடத்திற்கு மீட்டெடுத்து செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தற்போது அந்த மான் சாலை ஓரமாக தொடர்ந்து உலா வருகின்ற நிலையில், அதிவேகமாக செல்கின்ற வாகனங்கள் மானின் மீது மோதும் அபாயம் இருப்பதால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் எப்போது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை அப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad