அதனை முன்னிட்டு, திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள், திருக்கோயிலின் மேல்தளத்தின் உறுதித்தன்மை, குடமுழுக்கிற்கு வருகை தரும் பக்தர்களுக்கான தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன்,இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, இணை ஆணையர்கள் எம். அன்புமணி, எஸ்.ஞானசேகரன், திருக்கோயில் தக்கார் ஆர், அருள் முருகன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக