காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 ஜூன், 2025

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா


 நீலகிரி மாவட்ட மகளிர் காங்கிரஸ், குன்னூர் நகர காங்கிரஸ், குன்னூர் வட்டார காங்கிரஸ், கோத்தகிரி நகர காங்கிரஸ் மற்றும் கோத்தகிரி வட்டார காங்கிரஸ் ஆகியவை இணைந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை இன்று கொண்டாடினர்


நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் R_கணேஷ் MLA அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நகர தலைவர் ஆனந்தகுமார் ,மகளிர் காங்கிரஸ் தலைவி நித்யா சசீந்திரநாத் தலைமையில், மாநிலச் செயலாளர் சித்ரா அம்மாள், பார்வதி அம்மாள், மேரி ஸ்டெல்லா அம்மாள், குப்புராஜ் அம்மாள், ரீனா (குன்னூர்), பிரேமா (ஊட்டி), தேவகி (கோத்தகிரி), கோமதி (குன்னூர்), விஜயா (குன்னூர்), வயலட் மேரி (முன்னாள் MC, குன்னூர்), லட்சுமி (MC, குன்னூர்), சுப்புராஜ் அம்மாள், ஜெயபாரதி (குன்னூர்), சிவகாமி (கரும்பாலம்), நகர காங்கிரஸ் தலைவர் ஆனந்தகுமார், புருஷோத்தமன், ராஜேந்திரன், ராஜன், தினகரன், பார்த்திபன், பாரூக், மனோஜ், ராபின், ராஜா பாய், சுப்பிரமணி, ஹரிச்சந்திரன், நூர் முகமது, கோத்தகிரி வட்டார தலைவர் சில்லபாபு, கமலாசீராளன், கே.பி.கேசவன் மற்றும் நகர தலைவர் வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


குன்னூர் காங்கிரஸ் அலுவலகத்தில் கேக் வெட்டப்பட்டு, பின்னர் ஊர்வலமாக வண்டிப்பேட்டையில் உள்ள ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கோத்தகிரி நகர தலைவர் வேலுசாமி, வட்டார தலைவர் சில்லபாபு மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கமலாசீராளன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.


 ஊர்வலம் மவுண்ட் ரோடு, குன்னூர் மார்க்கெட் வழியாகச் சென்று, பள்ளி மாணவ-மாணவியர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு குன்னூர் பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர், காந்தி சிலைக்கு ஆனந்தகுமார், மனோஜ், நித்யா சசீந்திரநாத் ஆகியோர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து, காமராஜர் சிலைக்கு வட்டார தலைவர் சுப்பிரமணி, நகர தலைவர் ஆனந்தகுமார் மற்றும் வட்டார தலைவர் சில்லபாபு ஆகியோர் மாலை அணிவித்து, தேநீர் வழங்கி விழாவை நிறைவு செய்தனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad