14 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி வாகனம் வழங்காததை கண்டித்து பெருந்துறையில் 11ஆம் தேதி உண்ணாவிரதம் மாற்றுத்திறனாளி தேவராஜ் அறிவிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

14 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி வாகனம் வழங்காததை கண்டித்து பெருந்துறையில் 11ஆம் தேதி உண்ணாவிரதம் மாற்றுத்திறனாளி தேவராஜ் அறிவிப்பு



 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி அரச்சலூர் கிராமம் வடபழனி குமரன் நகரைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் (வயது 50) கிணறு வெட்டும் வேலையின் போது விபத்து ஏற்பட்டு இரு கால்களும் எலும்பு முறிவு ஏற்பட்டு இரு கைகளிலும் ஊன்று கோல் உதவியுடன் மெல்லமாக நடந்து வருகிற இவருக்கு மாற்றுத்திறனாளிக்கான வாகனம் வழங்க கோரி மனு செய்து இதுவரை வழங்கப்படவில்லை....



 கடந்த 14 ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.... எனவே வருகிற 11/6/2026 அன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகையின் போது உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.... இது சம்பந்தமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இன்று 9-6-2025 மனு அளித்தார்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad