வாணியம்பாடி அருகே 14 வயது சிறுமி யை காதலித்து கடத்தி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
வாணியம்பாடி,ஜூன்.20-
திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவர் பெங்களூரில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த நிலை யில் இவர் வாணியம்பாடியில் உள்ள இவருடைய உறவினர் வீட்டுக்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த (14 வயது) சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை கடந்த 1 ஆம் தேதி அந்த இளைஞர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திரு மணம் செய்துகொண்டார். சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் கடந்த 10 ஆம் தேதி வாணியம்பாடி நகர காவல் நிலை யத்தில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.மேலும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட இளைஞர் அன்பரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் செய்தியாளர் மஞ்சுநாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக