பந்தலூரில் இன்று நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 150க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி பந்தலூர் அனைத்து வியாபாரிகள் நல சங்கம், சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தின.
முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மகாத்மா காந்தி பொது சேவை மையம் தலைவர் நௌஸாத், கூடலூர் நுகர்வோர் மைய துணை தலைவர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் மகேந்திரபூபதி, ஞானவேல், சில்ட்ரன் சரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுஜித் கண்ணா, பந்தலூர் அனைத்து வியாபாரிகள் நல சங்க பொருளாளர் ஜெயராஜ், சங்க நிர்வாகி சந்திரலேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதகை அரசு மருத்துவ கல்லூரி முதுநிலை ஈம்மும் மருத்துவர்கள் தேவேந்திரன், ரூபன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை, சிகிச்சைகள் அளித்தனர்.
இதில் 33 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் 10 பேருக்கு கண் சதை வளர்ச்சி உள்ளிட்ட குறைபாடுகளும் கண்டறியபட்டது. இதில் முதற்கட்டமாக 20 பேர் மருத்துவ ஆலோசனைப்படி இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.
முகாமிற்கு ஏற்பாடுகளை கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகிகள், ரெப்கோ வங்கி மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக