ஆந்திராவில் இருந்து மதுரை வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

ஆந்திராவில் இருந்து மதுரை வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல்


ஆந்திராவில் இருந்து மதுரை வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல் - கஞ்சா கடத்திய வாலிபர்கள் இருவரை கைது செய்த சிலைமான் காவல்துறையினர்.



ஆந்திராவில் இருந்து மதுரை வரியாக ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தவுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிலைமான் சரக காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.



அப்போது மதுரை பதிவெண் கொண்ட சந்தேகத்திற்குமிடமான வகையில் வந்த கார் ஒன்றை மடக்கி பிடித்து சோதனையிட்டபோது அதில் சாக்கு மூட்டைகளில் 160 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.


இதனையடுத்து காரில் இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்த போது ஆந்திராவில் இருந்து கடத்திவந்து ராமேஸ்வரம் கடலில் இருந்து இலங்கைக்கு கடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த நேசகுமார் ,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜான் பெனட்ரிக் ஆகிய இருவரையும் சிலைமான் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 160 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டதோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad