உலக இரத்த கொடையாளர் தினம் முன்னிட்டு வேலூர் சின்ன அல்லாபுரம் கிராம இளைஞர்கள் இரத்த தானம்!
வேலூர் , ஜூன் 15 -
வேலூர் மாவட்டம் உலக இரத்த கொடை யாளர் தினத்தினை முன்னிட்டு வேலூர் இரத்த மையம், சின்ன அல்லாபுரம் பொது மக்கள், பெரியோர்கள் இளைஞர்கள் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் மற்றும் இலவசல கண் பரிசோதனை முகாம் இன்று 15.06.2025 காலை 10 மணி யளவில் சின்ன அல்லாபுரம், களத்துமேடு திரெபதியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்விற்கு உதவும் உள்ள ங்கள் அமைப்பின் தலைவர் இரா.சந்திர சேகரன் தலைமை தாங்கினார். காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத் தலைவர்முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்து பேசினார்.
கிராம நாட்டடாண்மை முன்னாள்மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், செயலாளர் எல்.எஸ்.சரவணன், பொருளாளர் மணி கண்டன், உள்ளிட்ட 20பேர் இரத்த தானம் செய்தனர்.வேலூர் இரத்த மையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் மகேஷ்,உரிய இரத்த பரிசோதனைகள் மேற்கொண்டார் மேலும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மணையின் நிர்வாக அலுவலர் எம்.பில் தேவ் தலைமையில் குழுவினர் கண் பரி சோதனைகள் மேற்கொண்டனர்.வேலூர் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் எம்.எம். மணி, வேலூர் இரத்த மையத்தின்
ஒருங்கிணைப்பாளர் கே.சிவன், பிரதாப் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக