பெரிய மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.17 லட்சம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

பெரிய மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.17 லட்சம்



ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நிரந்தரமாக 6 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் காணிக்கை, 6 மாதத்திற்கு ஒருமுறை எண்ணுவது வழக்கம். அந்த வகையில், பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில், துணை ஆணையர் நந்தகுமார் (சரிபார்ப்பு) தலைமையில் கோயில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டது.


இதில், 17 லட்சத்து 41 ஆயிரத்து 49

ரூபாயும், 73 கிராம் தங்கமும், 362

கிராம் வெள்ளியும் கிடைத்தது.

உண்டியல்கள் எண்ணும் பணியில்,

கோயில் அதிகாரிகள், கோயில்

பணியாளர்கள், பக்தர்கள் என

எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

கோயில் செயல் அலுவலர் அஞ்சுகம்,

ஆய்வாளர் சங்கர கோமதி ஆகியோர்

உடனிருந்தனர். இதுகுறித்து கோயில்

அதிகாரிகள் கூறியதாவது: இந்த

உண்டியல்கள் காணிக்கை என்பது

கடந்த காலங்களை விட அதிகம்

என்றும் ஆங்கில புத்தாண்டு,

தைப்பொங்கல், சித்திரை 1 ஆகிய

நாட்களில் பக்தர்கள் அதிகளவில்

கோயிலுக்கு வந்ததால், காணிக்கை

அதிகரித்துள்ளது. இவ்வாறு

அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் 

ம. சந்தானம் 

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad