காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பால் 8 ஊராட்சிகளை சேர்ந்த 71 கிராம பொதுமக்களுக்கு குடிநீர் தடை, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பால் 8 ஊராட்சிகளை சேர்ந்த 71 கிராம பொதுமக்களுக்கு குடிநீர் தடை, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பால் 8 ஊராட்சிகளை சேர்ந்த 71 கிராம பொதுமக்களுக்கு குடிநீர் தடை, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் இலந்தக்கரை நீரேற்று நிலையத்திலிருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இலந்தக்ககரை ஊராட்சி, வேளாரேந்தல் ஊராட்சி, மாரந்தை  ஊராட்சி, சேதாம்பல் ஊராட்சி, ஏரிவயல் ஊராட்சி, மேலமருங்கூர் ஊராட்சி, சிலுக்கபட்டி ஊராட்சி, உசிலங்குளம் ஊராட்சி ஆகிய 8 ஊராட்சிகளுக்குட்பட்ட சுமார் 71 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீரானது மிக முக்கிய அத்தியாவசிய ஆதாரமாக விளங்கி வருகிறது. 


ஆனால் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் சரியாக வரவில்லை என கிராம பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து குடிநீரானது பொதுமக்கள் பயன்பெறாமல் மண்ணோடு மண்ணாக வீணாகி வருகிறது. 


இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதையும், குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை பார்க்கும் போதும் மிகுந்த மனவேதனையை அளிப்பதாக பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட மேலாண்மை அதிகாரிகள் குழாய் உடற்பயி சரி செய்வது கிராம பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் எந்த ஒரு தடையுமின்றி வணங்கிட 8 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 71 கிராமங்களை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad