கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி போக்குவரத்து துறை காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் ரோகினி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேருடன் இணைந்து கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் மற்றும் 'No helmet No entry' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது .
இதில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் Helmet தலையில் அணிந்தும், கையில் தாங்கிய படியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியானது கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம் முதல் விவேகானந்தபுரம் ஜங்ஷன் வரையிலும் நடைபெற்றது .இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவன ஈர்ப்பை பெற்றது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக