நெய்வேலி தேசிய மின்சக்தி மையத்தில் பணிப் பயிற்சி தொடக்க விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

நெய்வேலி தேசிய மின்சக்தி மையத்தில் பணிப் பயிற்சி தொடக்க விழா

நெய்வேலி தேசிய மின்சக்தி மையத்தில் பணிப் பயிற்சி தொடக்க விழா


கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இந்தியா லிமிட் நிதிநல்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த ஓர் ஆண்டு முதுநிலை பட்டயப் பயிற்சியின் தொடக்க விழா, நெய்வேலி தேசிய மின்சக்தி பயிற்சிநிறுவனத்தில்  நடைபெற்றது.
இந்திய எரிசக்தித் துறையின் தன்னாட்சி நிறுவனமான  தேசிய மின்சக்தி பயிற்சி மையம் நெய்வேலி நிலக்கரி நிறுவனத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிப்பயிற்சி பட்டய வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் ஒருபகுதியாக என்.எல்.சியின் நிதிநல்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த ஓர் ஆண்டு முதுநிலை பட்டயப் பயிற்சியின் தொடக்கவிழா  நடைபெற்றது.
நெய்வேலி நிலக்கரி நிறுவன அதிபர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி மற்றும் இயக்குநர் டாக்டர் சுரேஷ் சந்திர சுமன் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் நடைபெற்ற இவ்விழாவில்,
தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன மேலாண் இயக்குநர் முனைவர் தீப்தாகுமார் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பினைத் தொடங்கி வைத்தார்கள். 
மேலும் நிலக்கரி நிறுவன சுரங்க  மனிதவள இயக்குநர்  சமீர் சுவரப், மின் பிரிவு இயக்குநர்   எம்.வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். 
பயிற்சித் திட்டம் குறித்து தேசிய மின் சக்தி பயிற்சி நிறுவன இயக்குநர்  எஸ்.அமிர்தவல்லி அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
முன்னதாக தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன முதன்மை இயக்குநர் முனைவர் எஸ். செல்வம் வரவேற்புரை ஆற்ற, மின்சக்தி பயிற்சி மையத்தின் துணை இயக்குநரும் பயிற்சித்திட்ட அலுவலருமான முனைவர் ஜெ.இராஜா  நன்றியுரை கூறினார். விழாவினைத் துணை இயக்குநர் எஸ் செந்தில்குமார் அவர்கள் தொகுத்து வழங்கினார்

ஓர் ஆண்டுக்காலம் நடைபெற உள்ள இப்பயிற்சியில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்தவர்கள் மற்றும் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட வேலை தேடுநர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற உள்ளனர். 

மின்சக்தி பயிற்சி நிறுவனத் வணிக வளர்ச்சிப் பிரிவு துணை இயக்குநர் முனைவர் க. வெற்றிவேல் உட்பட என்எல்சி இந்தியா நிறுவன பல்வேறு பிரிவுத் தலைவர்கள் மற்றும் தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad