ஈரோடு பகுதியில் தங்கி இருந்த வங்களாதேச தம்பதி கைது : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 ஜூன், 2025

ஈரோடு பகுதியில் தங்கி இருந்த வங்களாதேச தம்பதி கைது :


ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் வங்கதேசத்தை சேர்ந்த சிலரும் சட்ட விரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.


இதையடுத்து பெருந்துறை போலீசார் அவ்வப்போது சிப்காட் பகுதி, பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வங்கதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.


இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேச தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஈரோடு வீரப்பன்சத்திரம், காமராஜ் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தம்பதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த பப்லு சர்தார் (37), அவரது மனைவி ரிபியா காடுன் (37) ஆகியோர் என்பதும், இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.


கணவன் மனைவி இருவரும் சட்ட விரோதமாக தங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.


இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad