வேலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி 17ம் ஆண்டு விழா மாவட்டத் தலைவர் பஷீர் பங்கேற்பு
அன்னதானம் வழங்கல்!
வேலூர் , ஜூன் 21 -
தொகுதி செயலாளர் ஜி.அப்துல் ரசாக் தலைமையில் ஆண்டு விழா மற்றும் அன்னதானம் விழா!!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சைதாப்பேட்டை, பி.டி.சி சாலையில், SDPI கட்சியின் 17வது ஆண்டு துவக்க தினத் தை முன்னிட்டு, கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அன்னதான நிகழ்ச்சி, வேலூர் கிழக்கு மாவட்டம் வேலூர் மாநகரத்தில் வேலூர் தொகுதி செயலாளர் ஜி. அப்துல் ரசாக் தலைமையிலும், தொகுதி தலைவர் ரியாசுர் ரஹ்மான் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர்பஷீர் அஹ்மத் கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சிறப்புவிருந்தினர் களாக மாநில செயற்குழு உறுப்பினர் பையாஸ் அஹ்மத் கலந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.இதில் தொகுதி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 100க்கும்போட்டோ கலந்து கொண்டனர். இறுதியில் வேலூர் கிழக்கு மாவட்ட ஊடக அணி இஸ்ஹார் இமாம் நன்றியுரையாற்றி விழா நிறைவு பெற்றது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக