ராணிப்பேட்டை தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஆணையர் தலைமையில் தேர்தல்!
இராணிப்பேட்டை , ஜூன் 21-
ராணிப்பேட்டை மாவட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர் களாக க.அன்பழகன், மு.புருசோத்தமன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
மாவட்டத் தலைவராக இரா.விநாயகம் மாவட்டச் செயலாளராக பா.பாலமுருகன், மாவட்ட பொருளாளராக அ.பிரகாசம், மாவட்ட மகளிரணிச் செயலாளராக மு.கு.தேன்மொழி, மாவட்ட ஓய்வு பிரிவு செயலாளராக கி.ஜெயராமன், மாவட்ட துணைத்தலைவர் களாக ப.தெய்வ பிரகாசம், எச்.ரோஸ்லின் பிர்த்தாபால்
மாவட்ட துணைச் செயலாளர்களாக சு.தண்டபாணி, மு.கோவிந்தசாமி
மாநில செயற்குழு உறுப்பினர்களாக டி.ஜே.சீனிவாசன், வி.காபிரியேல் வேதம் மாணிக்கம் மாநில பொதுக்குழு உறுப்பி னர்களாக ம.கோபி டி.கே.தேவராஜூலு, அ.சக்திவேல், அ.சாந்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக் கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ்அவர்கள் சான்றி தழ்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் முரண்பாடு களையப்பட்டு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமிப் பதை கைவிட வேண்டும்.
பழைய பென் சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தணிக்கை தடை நீக்கி ஆசிரியர்கள் இடம் இருந்து பணம் வசூலிப்பது கைவிட்டு, ஓய்வு பெறும் ஆசிரியர்களை மகிழ்ச்சியாக பணிநிறைவு செய்ய வழிவகை செய்யவேண்டும்.
உடனடியாக தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிட வேண்டும்.
மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
5400 தர ஊதியம் பிடித்தம் உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதில் காவேரிப்பாக்கம் வட்டாரச் செயலாளர் மோ.பாஸ்கரன், பொருளாளர் ஏ.தாவீது, சோளிங்கர் வட்டாரச் செயலா ளர் அ.மகேஷ்பாபு நெமிலி வட்டாரத் தலைவர் சரவணன், வட்டாரச் செயலாளர் ந.சுப்பிரமணி அரக்கோணம் மேனாள் கல்வி மாவட்ட செயலாளர் க,வாசு, வட்டார பொருளாளர் நா.வேல்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக