தமிழக வெற்றி கழகம் சார்பில், நிறுவன தலைவர் தளபதி விஜயின் 51ம் பிறந்த நாள் விழா முன்னிட்டு இரத்ததான முகாம்!
வேலூர் , ஜூன் 21 -
வேலூர் மாவட்டம், வேலூர், தமிழக வெற்றி கழகம் சார்பில், நிறுவன தலை வர் தளபதி விஜயின் 51ம் பிறந்தநாள் விழா முன்னிட்டு இரத்ததான முகாம், தமிழக வெற்றி கழகம் மாவட்ட இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப் பாளராக மாவட்ட செயலாளர் வேல் முருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி முகமை தொடங்கி வைத்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி க்கழக முக்கிய நிர்வாகிகள் பிரசாந்த், வினோத் கண்ணா, தனுஷ், சத்துவாச் சாரி வாசுதேவன், சுரேஷ், மணிகண்டன், விக்ரம், மகேஸ்வரன், பாஸ்கரன்,புருஷோ த்தமன், பத்திரிகை செய்தியாளர் நல்ல கண்ணு, மகளிர் அணியினர் பேபி லட்சுமி, லட்சுமி, யாமினி, துர்கா, ராகசுதா, கௌசல்யா மற்றும் இளைஞர் அணி, அனைத்து அணி உறுப்பினர்கள், சிஎம்சி மருத்துவமனை மருத்துவர், செவிலியர் கள் மற்றும் ரத்த குழுவினர் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக