நாசரேத்து ஒய்எம்சிஏ சார்பில்,ஒய்எம்சிஏ 181வது நிறுவனர் நாள் கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 ஜூன், 2025

நாசரேத்து ஒய்எம்சிஏ சார்பில்,ஒய்எம்சிஏ 181வது நிறுவனர் நாள் கொண்டாட்டம்.

நாசரேத்து ஒய்எம்சிஏ சார்பில்,
ஒய்எம்சிஏ 181வது நிறுவனர் நாள் கொண்டாட்டம். 7-6-2025 அன்று மாலை 5:00 மணி அளவில் நடைபெற்றது..

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய குருவானவர் அருள்திரு.ஞானசிங் எட்வின் ஜெபத்தில் வழி நடத்தி அருளுரை வழங்கினார்.

ஜெ.லவ்ஸன் வேதபாடம் வாசிதார், தலைவர் சி.ஜெ.ஆம்ஸ்டிராங்க் வரவேற்புரை வழங்கினார் 

தென் மண்டல ஒய்எம்சிஏ 
வளர்ச்சி பிரிவுச் செயலர் ஜெ.ஜான்போஸ்,
நெல்லை துணை மண்டல செயலர்
பி.பொன்ராஜ் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறிஇயல் கல்லூரி முன்னாள் தாளாளர் இரா.லேவி அசோக் சுந்தர்ராஜ்,
இந்திய ஏக இரட்சகர் சபைச் செயலரும்,நாசரேத்து பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான குரு.மத்தேயு ஜெயசிங் மற்றும் 
ஒய்எம்சிஏ முன்னாள் செயலர் வே.இரஞ்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நாசரேத்து நல்ல சமாரியன் மனவளர்ச்சி குன்றியோர் இல்லம், திருமறைஊர் முதியோர் இல்லம், காது கேட்காதோர் மற்றும் பேச முடியாதோர் பள்ளி,கனோன் சித்தர் தாமஸ் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி,கல்வாரி சேப்பல் அறக்கட்டளை இல்லம் உள்ளிட்டவைகளுக்கு அரிசி மூடைகள் வழங்கப் பட்டன..

ஒய்எம்சிஏ முன்னாள் தலைவர்
பா.எபனேசர் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்டீபின்ஸ், இம்மானுவேல் அருள்தம்பி,ஜோஷி,ஜட்சன் உட்பட பலர் செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad