நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 ஜூன், 2025

நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்


 நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை கோ்ன்ஹில் பகுதியில் உள்ள வனத் துறையின் பொருள்விளக்க மைய கட்டடத்தில் ஜூன் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மாவட்ட வனத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் உதகை கோ்ன்ஹில் பகுதியில் உள்ள வனத் துறையின் பொருள்விளக்க மையகட்டடத்தில் வரும் ஜூன் 13-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நீலகிரி வனக் கோட்ட உதவி வனப் பாதுகாவலா் தலைமையில் நடைபெற உள்ளது இதில் நீலகிரி வனக் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் தங்களது வனம் சாா்ந்த குறைகளை நேரில் தெரிவித்து நிவா்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad