நெமிலி நகரில் நடைபெற்ற வி.சி.க வினரின் திருச்சி பேரணி விளக்க பிரச்சாரம்!!
அரக்கோணம் ,ஜூன் 10
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி நகரில் நெமிலி கிழக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வருகிற ஜூன் 14ம் தேதிநடைபெற இருக்கும் மதச்சார் பின்மை மாபெரும் பேரணி தொடர்பான விளக்க பிரச்சார கூட்டம் கொட்டும் மழையில் நடைபெற்றது.இந்தப் பிரச்சார கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்த நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் அரக் கோணம் ஒன்றிய குழு உறுப்பினருமான நரேஷ் தலைமை தாங்கினார் .இதில் முன்னாள் மாவட்ட செயலாளர். கௌத மன் மற்றும் வழக்கறிஞர். தமிழ்மாறன் நெமிலி ஒன்றிய பொறுப்பாளர். நந்த குமார் மற்றும் நெமிலி நகர பொறுப் பாளர்கள். மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம் கட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக