மதுரை ஆரப்பாளையத்தில் தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேஷை தாக்கிய மாரிமுத்து சமூக வலைதளங்களில் அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டதால் தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை இன்று பஸ் ஸ்ட்ரைக் வாபஸ் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வழக்கம்போல 81. பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு.
பொதுமக்களின் பதட்டம் தணிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
திருப்பூர் மாவட்டம்; தாராபுரம் போக்குவரத்து கழக பணிமனையில் டீ. காளிபாளையத்தை சேர்ந்த கணேசன் (வயது 51) என்பவர் ஓட்டுனராகவும், சிராம் பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாஷ் (43) என்பவர் நடத்துனராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் மாரிமுத்துவாழ் தாக்கப்பட்ட கணேசன் காது மற்றும் கை கால்கள் வலியால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடத்துனர் தாக்கப்பட்டதை கண்டித்து தாராபுரம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மற்றும் தொ.மு.ச. சங்கத்தினர், ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர்கள் தாராபுரம் போக்குவ ரத்து பணிமனை முன்பு மதுரை கிளையைச் சேர்ந்த மேலாளர் மற்றும் தணிக்கையாளரை உட னடியாக கைது செய்ய வேண்டும் மேலும் மாரிமுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர் ஓட்டுநர் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
அப்போது நேற்று ஆர்ப்பாட்டத்தின் போது:-பஸ் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில்
நேற்று இரவு மாரிமுத்து சமூக வலைதளங்கள் மூலம் ஓட்டுநர் கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தான் செய்தது தவறுதான் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
மாரிமுத்து மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில் தாராபுரத்தில் இன்று நடைபெற இருந்த பஸ் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வழக்கம் போல தாராபுரத்தில் 80 க்கு மேற்பட்ட பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.
இதனால் பொதுமக்களின் பதட்டம் தணிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
மேலும் ஓட்டுநர் கணேஷை தாக்கிய ஐந்து அதிகாரிகள் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக