விடுதியில் புகுந்து கல்லூரி மாணவனை மிரட்டி ரூ.74 ஆயிரம் பறித்த பாஜ மாநில நிர்வாகியின் மகன், 4 பேர் கைது!
காட்பாடி , ஜூன் 9 -
கைது செய்யப்பட்ட பாஜ நிர்வாகியின் மகன் ரோகித் மற்றும் 4 வாலிபர்கள்.
காட்பாடியில் பரபரப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவனை மிரட்டி ரூ.74 ஆயிரம் பறித்த, பாஜ மாநில நிர்வாகியின் மகன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி வைபவ் நகரில் உள்ள தனியார் விடுதி யில் தங்கி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த (22 வயது) மாணவன், தனியார் கல்லூரி யில் பி.டெக் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 6ம் தேதி இரவு விடுதி யில் 5 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து மாணவனை மிரட்டி பணம் கேட் டுள்ளனர்.ஆனால் அவர் கொடுக்க மறுத் ததால் தாக்கமுயன்றதாக தெரிகிறது. பின்னர் மாணவனை அச்சுறுத்தி ரூ.74 ஆயிரம். வாட்ச், இயர்பட்ஸ் உள்ளிட்ட வற்றை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.இதுகுறித்து மாணவன் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி போலீஸ் எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசி டிவி கேமரா காட்சிகளை
ஆய்வு செய்தார்.இதன் மூலம் மாண
வனை மிரட்டி பணம் பறித்த காட்பாடியை சேர்ந்த ரோகித்(வயது 20), பிரவீன் (வயது 22), விக்னேஷ் (வயது 22) அரி (வயது 27) மற்றும் வேலூர் சைதாப் பேட்டையை சேர்ந்த அபினாஷ் (வயது 25) ஆகிய 5 பேரை போலீ சார் நேற்று கைது செய்த னர். இதில் ரோகித் என்பவர் பாஜக பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கே.ஜி.குட்டியின் மகன் என்பது குறிப்பி டத்தக்கது, மாணவனை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாஜமாநில நிர்வாகி யின் மகன் உட்பட 5 பேர் கைது செய்யப் பட்ட சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக