குடியாத்தத்தில் கனவு அறக்கட்டளை யின் சார்பாக சிறுமியின் கண் அறுவை சிகிச்சைக்காக 20.000 வழங்கல்!
குடியாத்தம் , ஜூன் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கனவு அறக்கட்டளை சார்பில் ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் உள்ள N.ராஜசேகர் இவரின் மகள் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி R.சுருதிகா இந்த மாணவிக்கு இரண்டாரை வயது இருக்கும் போது மாலை நேரங்களில் கண் மேல் நோக்கி பார்ப்பதை அறிந்து அவரின் பெற்றோர் கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கண்ணில் புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதால் கடந்த ஏழு வருடங்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளனர் தற்போது புற்றுநோய் இரண்டு கண்களிலும் பாதிக்கப்பட்டுள்ள தால் இரண்டு கண்களை மருத்துவர்கள் அகற்றிவிட்டு பிளாஸ்டிக் கண்களை தற்போது வைத்துள்ளனர் புற்றுநோயை இரண்டு கண்களிலும் முழுவதுமாக அகற்றிவிட்டு மீண்டும் கண்களை பொருத்துவதற்கு போதிய பணம் இல்லாமல் மிகவும் சிரமபடுவதாக மாணவியின் தந்தை தொலைபேசி வாயிலாக மிகவும் கண்ணீருடன் கனவு அறக்கட்டளையிடம் கூறினார் உடனடி யாக அறக்கட்டளையின் துணைதலைவர் V.A.K.P.தேவமுகுந்தன் MS MBA அவர் களின் ஏற்பாட்டில் ரூபாய் 20,000 தொகை யை நேரில் சென்று வழங்கினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக