பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றியதுவக்கப் பள்ளியில் 2025-2026 ஆண்டுக்கான முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 ஜூன், 2025

பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றியதுவக்கப் பள்ளியில் 2025-2026 ஆண்டுக்கான முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்!

பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றியதுவக்கப் பள்ளியில் 2025-2026 ஆண்டுக்கான முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்!
பேர்ணாம்பட்டு, ஜூன் 28

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தல பல்லி‌ ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி 2025–2026 ஆம் கல்வியாண்டிற் கான முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 27.06.2025 வெள்ளிக் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்தில்பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன: பள்ளி நிதி பயன்பாடு சமக்ர கல்வி திட்ட த்தின் கீழ் ரூ.25,000/- நிதி கிடைத்துள்ளது இதில் பள்ளி நிதியில் பள்ளிபதிவேடுகள் பாட துணைப் பொருட்கள் பராமரிப்பு நிதியில் மின்சாதன பழுது, குடிநீர் குழாய் சரிசெய்தல், கழிவறை சுத்தம் மற்றும் கிருமிநாசினி வாங்குதல், கட்டிட சீரமை ப்பு ஆகிய பணிகளுக்காக நிதி பயன் படுத்தப்படும் மழலை முன்பருவக் கல்வி வகுப்பு தொடர்ச்சி 5 ஆண்டுகளாக நடை பெற்றுவரும் மழலை வகுப்பு இந்த ஆண்டும் தொடர தீர்மானிக்கப்பட்டது. தன்னார்வலர் திருமதி ஏ. யாஸ்மின் அவர்களை மீண்டும் நியமித்து, அவருக் கான ஊதியத்திற்கும் ஒப்புதல் வழங்கப் பட்டது. துப்புரவு பணியாளர் நியமனம்
பள்ளிக்கு பத்து ஆண்டுகளாக பணியா ளர் இல்லாத நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிய இருவரை யும் மீண்டும் நியமித்து, அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.36,000/-ஐ தலைமை ஆசிரியர்  பொன். வள்ளுவன் அவர்கள் தனது சொந்த நிதியில் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.மெல்ல கற்கும் மாணவர் களுக்கு சிறப்பு உதவி 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள வகுப்புகளில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு தனிப்பட்ட கவனத்துடன் கற்பிக்க சிறப்பு ஆசிரியர் நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
 காமராஜர் பிறந்தநாள் விழா வருகிற ஜூலை 15ஆம் தேதி கல்விக்கண் கொடுத்த காமராஜர் பிறந்தநாளை பள்ளியில் சிறப்பாக கொண்டாட திட்ட மிடப்பட்டது இக்கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு முதல்வரின் "நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர்  பொன். வள்ளுவன் அவர்கள் சொந்த நிதி ரூபாய் .5 லட்சம் செலவிட்டு கட்டி மோல்டிங் போடப்பட்டுள்ள விழா மேடை பணிகளை, மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad