வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம்!
திருப்பத்தூர் , ஜூன் 28 -
விவசாயிகள் முன்னிலையில் முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன் பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தர வல்லி துவக்கி வைக்க வந்தார் அப்போது அருகில்இருந்த விவசாயிகளைஅழைத்து முகமை துவக்கி வைக்க ரிப்பன் வெட்ட
சொன்னார் இந்த சம்பவம் அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் விவசாயிகள் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் மற்றும் பம்புகள் பற்றியும் மேலும் மின் மோட்டார்களை எவ்வாறு பயன்படுத்துவது இயந்திரங்களை பற்றி யும் மானிய விலையில் பொருட்களை தருவதாகவும் பொதுமக்களுக்கும்விவசா யிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.இந்த முகாமில் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை கோ தில் மொழியன். வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா மற்றும் தோட்டக் கலை துணை இயக்குனர் தீபா உதவி பொறியாளர்கள் மகேந்திரன். மோகன் .ரம்யா வேளாண் துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக