விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடும் கும்பலை அதிரடியாக கைது! காவேரிப்பாக்கம் காவல்துறையினர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 ஜூன், 2025

விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடும் கும்பலை அதிரடியாக கைது! காவேரிப்பாக்கம் காவல்துறையினர்!

விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை  திருடும் கும்பலை அதிரடியாக கைது!  காவேரிப்பாக்கம் காவல்துறையினர்!  

காவேரிப்பாக்கம் , ஜூன் 28 -

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப் பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரிப்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில் மற்றும் பொன்னப்பத்தாங்கல்குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக வந்த புகாரை அடுத்து காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அவர்கள் உத்தரவுபடி அரக்கோணம் காவல்துனை கண்காணிப் பாளர் ஜபார்சித்திக் அவர்கள் மேற் பார்வையில்  காவேரிப்பாக்கம்  காவல் ஆய்வாளர்  சண்முகம் தலைமையில் அருண்குமார் ராமதுரை ஆகிய இரண்டு உதவி ஆய்வாளர்கள் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப் பட்டு வந்த நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 28/6 /2025 ஆம் தேதி காலையில் பொன்னப்பத்தாங்கல் கூட்ரோடு பகுதியில் வாகன தனிக்க செய்து கொண்டு இருந்தபோது சந்தேகத் திற்கிடமான இருசக்கர வாகனத்தில் வந்த  ராஜேஷ் பானவரம் நாகராஜ்,  நீலகண்ட ராயப்பேட்டை ஆகியோரை  விசாரணை செய்து அவர்களிடமிருந்து சுமார் 8 இருசக்கர வாகனங்கள் (ஹிமாலயா , பேஷன் ப்ரோ,
ஸ்ப்ளெண்டர்+  TVSஸ்கூட்டி ,ஜூபிடர் , ஹோண்டா, ஆக்டிவா ) போன்றவாகனங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன  மேலும் திருட்டு வண்டியை விற்பனைக்காக பதுக்கி வைத்த தினேஸ் நீலகண்டராயபேட்டை என்பவரையும் கைது செய்யப்பட்டு  மூன்று நபர்களை யும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது மேற்படி இருசக்கர வாகனங்களை அதன் உரிமையாளரிடம் நீதிமன்றத்தின் மூலம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது


தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad