கூட்டத்தில் பொறையார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசும்பொழுது போதை பொருள் பழக்கத்தினால் சினிமா துறையில் ஜாம்பவான்கள் சிலரின் குடும்பங்கள் வீணாகி உள்ளதாக எடுத்துக்காட்டி பேசினார் குறிப்பாக சாருக் கான் குடும்பத்தை எடுத்துக்காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது பின்னர் காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றும் பொழுது மாணவர்களுக்கு பல கருத்துக்களை எடுத்துரைத்தும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அழிவுகள் குறித்தும் விளக்கி பேசினார் அந்த நேரத்தில் மாணவர் ஒருவரை அழைத்து தான் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்ததால் அந்த மாணவனை கௌரவிக்கும் வகையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
அப்பொழுது அனைவரும் நெகிழ்ச்சியுடன் கரகோஷம் எழுப்பினர் தொடர்ந்து போதை பொருள் குறித்து தங்களுக்கு உடனுக்குடன் தகவல் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது பின்னர் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக