நீலகிரி மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை திரு எச் ஆர் Raoபகதூர் ஆரி கவுண்டர் அவர்களின் 54 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

நீலகிரி மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை திரு எச் ஆர் Raoபகதூர் ஆரி கவுண்டர் அவர்களின் 54 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.


நீலகிரி மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை திரு எச் ஆர் Rao பகதூர் ஆரி கவுண்டர் அவர்களின் 54 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.                           



நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் நினைப்பதிவாளர் திரு ரா தயாளன் அவர்கள் ஆரி கவுடர் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பேசுகையில் நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு இயக்கம் உருவாக காரணமாக இருந்த மாபெரும் தலைவர் இவர் என்றும் நீலகிரி மாவட்டத்திற்கென புதிதாக முத்தோரை பாலடாவில்நிறுவப்பட உள்ள கூட்டுறவு மேலாண்மை  பயிற்சி நிறுவனத்திற்கு ராவ் பகதூர் ஆரி கவுடர் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் எனும் பெயர் சூட்டவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விட்டுள்ளதாகவும் கூறினார் மேட்டுப்பாளையம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் 1935 ஆம் ஆண்டு நீலகிரி கூட்டுறவு சங்கம் அமைய காரணமாக இருந்தார் மேலும் சந்தைப்படுத்துதல் முறையை முதன்  முதலில் கூட்டுறவு துறையாக உருவாக்கியவர் இதன் தந்தையாக விளங்குகிறார் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் என் சி எம் எஸ் என்று போற்றப்படும் இந்நிறுவனம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது என்று அவர் பெருமையினை எடுத்துக் கூறி மலர்  தூவி மரியாதை செய்தார் இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.            



நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad