எஸ். எஸ். கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய பாட புத்தகங்களை வழங்கிய அமைச்சர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு 2025-26ஆம் பள்ளிக் கல்வி ஆண்டிற்கான தமிழக அரசு வழங்கும் புதிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் வழங்கி பள்ளிக்கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக