ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் பொதுவாக 40 டன்கள் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால் கடந்த சில நாட்களாக மீன்கள் வரத்து குறைந்துள்ளது.
இதனால் மீன்கள் விலை உயர்ந்து வருகிறது. மார்க்கெட்டிற்கு கேரளாவில் இருந்து வெறும் 12 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட மீன்கள் விலை ரூ. 50-100 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ வஞ்சரம் 1,100 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் ஒரு கிலோ ரூ. 1,200 ஆக அதிகரித்து விற்பனையானது. இதேபோல் வெள்ளை வாவல் கடந்த வாரம் ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. 1,300-க்கு விற்பனையானது.
மார்க்கெட்டில் விற்கப்பட்ட மற்ற
மீன்களின் விலை கிலோவில்
வருமாறு: சால்மோன் - 850, கொடுவா
- 850, கருப்பு வாவல் - 900, கிளி
மீன் - 700, முரல் - 500, சங்கரா -
450, திருக்கை - 450, வசந்தி - 600,
விளாமின் -600, தேங்காய் பாறை - 600,
பெரிய இறால் - 900, சின்ன இறால்
- 600, ப்ளூ நண்டு - 750, அயிலை
- 350, 0 - 300,
- 700.
இதேபோல் கருங்கல்பாளையத்தில்
உள்ள மீன் மார்க்கெட்டிலும் மீன்கள்
வரத்து குறைவாக இருந்தது. இதன்
எதிரொலியாக கடந்த வாரத்தை விட
இந்த வாரம் மீன்கள் விலை சற்று
உயர்ந்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக