பள்ளி கல்வி ஆண்டு தொடக்கத்தின் முதல் நாளன்று தமிழக அரசின் பாடப்புத்தகங்கள், சீருடைகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

பள்ளி கல்வி ஆண்டு தொடக்கத்தின் முதல் நாளன்று தமிழக அரசின் பாடப்புத்தகங்கள், சீருடைகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.

 


பள்ளி கல்வி ஆண்டு தொடக்கத்தின் முதல் நாளன்று தமிழக அரசின் பாடப்புத்தகங்கள், சீருடைகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர். 


தமிழகம் முழுவதும் ஜூன் 2 ஆம் தேதி 2025-26 ஆம் பள்ளிக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பமாகும் நிலையில், தலைநகர் சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா புதிய பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள்,  நோட்டுகள், ஸ்கூல் பேக் உள்ளிட்டவற்றை வழங்கி பள்ளிக்கல்வி ஆண்டை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பர்மா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் புதிய பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள், நோட்டுகள், ஸ்கூல் பேக் உள்ளிட்டவற்றை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்வில் மானாமதுரை நகரக் கழகச் செயலாளர் க. பொன்னுச்சாமி, மானாமதுரை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் துரை.ராஜாமணி, நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துச்சாமி, 2-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி திருமுருகன், பள்ளி தலைமை ஆசிரியர் அழகர்சாமி, எஸ். எஸ். ஏ. ஒருங்கிணைப்பாளர் ராமையா, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பானு, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவச் செல்வங்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad