தொலைநோக்கு சிந்தனையில் 2026 தேர்தலில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 ஜூன், 2025

தொலைநோக்கு சிந்தனையில் 2026 தேர்தலில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும்

 


52 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இளைஞர்களின் உழைப்பை அங்கீகரித்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வகையில் தொலைநோக்கு சிந்தனையில் 2026 தேர்தலில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும்



விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு பிரச்சனை எடுத்துக் கூறி காலையிலும் மாலையிலும் நேரில் சென்று ஆதரவு திரட்ட வேண்டும் வரக்கூடிய தேர்தலில் 100 பேர் வாக்களித்தால் 70 சதவீதம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க நீங்கள் சூழ்நிலை உருவாக்க வேண்டும்.


சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு.


மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் அகத்தாப்பட்டி வடக்கம்பட்டி லாலாபுரம் வில்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் புதிய  வாக்குச்சாவடி முகவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது   இதில் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர்கள் கண்ணன் பிரபுசங்கர் ராமையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் அகத்தாப்பட்டி வடக்கம்பட்டி லாலாபுரம் வில்லூர் 23க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதிய வாக்குச்சாவடி முகவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.



முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கள்ளிக்குடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வீரபத்திர சுவாமி திருக்கோவிலில் எடப்பாடியார் பல்லாண்டு காலம் வாழ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது மேலும் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு லாலாபுரம் அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நிகழ்ச்சியின் போது திருமங்கலம் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல் புளியங்குளம் ராமகிருஷ்ணன் மாவட்ட அவை தலைவர் முருகன் மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டியன் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சிவரக்கோட்டை ஆதிராஜா கலைப்பிரிவு மாவட்டச் செயலாளர் சிவசக்தி நிர்வாகிகள் அன்னமுத்து வில்லூர்சரவணன் விஜி அஜித் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்.


சீரோடும் சிறப்போடும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் 52 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் இன்றைக்கு வெற்றி வரலாறை உருவாக்குவதில் கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் 52 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இளைஞர்களின் உழைப்பை அங்கீகரித்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வகையில் எந்த கட்சியும் இல்லாத வகையில் ஒன்பது பேர் கொண்ட கிளைக் கழகம் அமைத்து வருகிற அம்மா ஆட்சி காலத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் உயர்ந்த தொலைநோக்கு சிந்தனையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் கிளைக் கழகம் அமைத்து அந்தப் பணியை 2026 தேர்தலில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையில் வருவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.


விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு பிரச்சனை இங்குள்ள நிலவரங்களை எடுத்துச் சொல்லி அதிகாரம் உள்ளபோது நாம் செயல்பாடு எப்படி இருந்தது என்றும் அதிகாரம் இல்லை என்றாலும் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் வரக்கூடிய தேர்தலில் 100 பேர் வாக்களித்தால் 70% இரட்டை இலை வாக்களிக்க நீங்கள் சூழ்நிலை உருவாக்க வேண்டும் என சிறப்பு உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad