பதப்படுத்தப்பட்ட மான் தோல் விற்றவர் சினிமா பாணியில் கைது!
வேலூர் , ஜூன் 12 -
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 69). இவர், பதப்படுத்தப்பட்ட மான் தோலை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வேலூர் வனத்துறையினரு க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், வியாபாரிகள்போல் பேசி மான் தோலை வனத்துறையினர் நேற்று (ஜூன் 10) பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக மான் தோலை விற்பனை செய்ததற்காக ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக