24வது ஆண்டு விழாவில் செயலாளர் ஜனார்த்தனனுக்கு 65வது மடாதிபதி விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானாச்சரிய சுவாமிகள் பாராட்டு!
வேலூர் , ஜுன் 1 -
வேலூர் மாவட்டம் விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் 24வது ஆண்டு விழா வும், அயல்நாடு பயணம் சென்று திரும்பி யவர்களுக்கு பாராட்டும், விஸ்வமலர் பதிவினால் மண முடித்தவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அகில இந்திய விஸ்வ கர்ம ஜெகத்குரு சீனந்தல் மடாலயத்தின் 65வது மடாதிபதி சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவாமிகள் தலைமை தாங்கி பாராட்டி பேசினார். சங்கத்தின் தலைவர் சி.தேஜோமூர்த்தி வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராஜன் தொகுப்புரையாற்றினார்.துணைத்தலைவர் எல்.பன்னீர்செல்வம், விஸ்வமலர் குழு தலைவர் எம்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஸ் ரெட்கிராஸ், இலண்டன் தமிழ்சங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிறுவனர் மற்றும் செயலாளர்செ.நா.ஜனார்த்தனன் அமெரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள அமைப்புச் செயலாளர் ம.அன்பரசு, வடமாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றியு டன் திரும்பியுள்ள உறுப்பினர்கள் டி.யோ கேஷ்குமார், வி.அருளரசு, சுசிசரவணன் விஸ்வமலர் பதிவின் மூலம் மணம் முடித்துள்ள கே.கோபிநாத்-சந்தியா புதுமண தம்பதிகளுக்கு சால்வையும் நினைவுப்பரிசும் வழங்கி சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவாமிகள் பாராட்டி னார்.வாழ்த்துரை உரிமை பறிக்கப்பட் டோர் பேரவையின் பொதுச்செயலாளர் கலச ராமலிங்கம், ஓய்வுபெற்ற வேளாண் மை பொறியல் துறையின் கண்காணிப்பு பொறியாளர் ஏ.அருணாசலம், ஓய்வு பெற்ற பதிவுத்துறை அலுவலர் க.சக்கர வர்த்தி, செய்யார் காசிவிஸ்வநாதர் ஆலய திருப்பணிக்குழு அறங்காவலர் ராமலிங்கம், ஆகியேர் வாழ்த்தி பேசினர்.
சங்கத்தின் நிறுவனர் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் எற்புரையாற் றினார்.தலைமை நிலைய செயலாளர் சு.சோமாஸ்கந்தன், துணைச்செயலாளர் ஜி.சுவாமிநாதன், செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.செந்தில்குமார், கே.குப்பன், ஜெ.ஜெயபிரகாஷ், எஸ்.சக்ரீஸ்வரன், எஸ்.தீனதயாளன், எஸ்.தேவராஜன், திருநாவுக்கரசு உள்பட பலர் பங்கேற்று பேசினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக