ஈரோடு மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். பொறியாளர் முருகேஷ் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டு அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது உறுப்பினர்கள் சிலர் எங்களது வார்டில் பணிகள் சரியாக நடக்கவில்லை தொடர்பாக அதிகாரிகளிடம் போன் செய்தால் அவர்கள் எடுப்பதும் இல்லை என குற்றச்சாட்டு சுமத்தினார்.
அப்போது மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசும்போது:
-ஏற்கனவே நகராட்சியாக இருந்த போது வாங்கிய குடிநீர் டெபாசிட் தொகையை தற்போது துணைவிதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தொகையை காட்டி உயர்த்த கூடாது. அவ்வாறு வாங்கி இருந்தால் அவற்றை திரும்ப பெற வேண்டும். குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை வருடம் ஒருமுறை 3 சதவீதம் உயர்த்துவதற்கு ஏதுவாக துணைவிதியில் கூறப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஸ்வீப்பிங் வாகனத்தை செயல்பாட்டில் பார்த்ததில்லை. மேலும் குடிநீர் கட்டணத்தை வீட்டின் சதுர அடிக்கு ஏற்ப உயர்த்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். உதாரணமாக 600 சதுர அடிக்கு ரூ.120, 601 முதல் 1200 சதுர அடிக்கு ரூ.150, 1201 முதல் 1800 சதுர அடிக்கு ரூ.180-ம் உயர்த்தப்பட்டுள்ளது இந்த உயர்வை மாமன்றம் ஏற்க கூடாது என கூறி வெளிநடப்பு செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக