கோத்தகிரி நகராட்சியில் 25 இலட்சம் மதிப்புடைய 6 ஆட்டோக்கள் இரண்டே ஆண்டுளில் குப்பை குழியில் காட்சிப் பொருளாக மாறி உள்ளதாக அதிருப்தி
கோத்தகிரி நகராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க பேட்டரியால் இயங்கும் 9 ஆட்டோக்கள் வழங்கபட்டது
இதை வழங்கி தற்போது இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில இந்த பல லட்சம் மதிப்புள்ள மக்கள் வரி பணத்தில் வாங்கப்பட்ட ஆட்டோகள் பயன்படுத்தாமல் 6 ஆட்டோக்களும் குப்பை குழியில் போடப்பட்டுள்ளது
இது அதிர்ச்சி அளிப்பதாகவும் அதிருப்தி அளிப்பதாகவும் வேதனை அளிப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்
கோத்தகிரி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் இருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டுச் செல்லப்படும் சுமார் 4 டன் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு நூறு சதவீத மறு சுழற்சி செய்யப்படுகிறது.
மேலும் இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரம் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் குப்பைகள் சிறு துகள்களாக அரைக்கபட்டு சாலைப் போடுவதற்கு தாருடன் கலக்கவும், மக்காத குப்பைகளை எரித்த சாம்பல் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகிறது.
கோத்தகிரி பகுதியில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளுக்கு செல்லும் நடைபாதைகள் குறுகியதாக இருப்பதால் தூய்மை காவலர்கள் தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை, லாரிகளில் ஏற்றுவதற்காக நீண்ட தொலைவிற்கு சுமந்து செல்ல வேண்டி இருந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு சிறிய நடைபாதைகள், சாலைகளில் சென்று குப்பைகளை சேகரிப்பதற்காக, சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் பேட்டரியால் இயங்கும் 9 ஆட்டோக்கள் மூலம் குப்பைகளை சேகரிக்க நிர்வாகம் முடிவெடுத்தது.
இதன்படி. தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 9 பேட்டரி ஆட்டோக்கள் 2022 நவம்பர் மாதம் வழங்கப்பட்டன.
அந்த ஆட்டோக்கள் கோத்தகிரி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன
இவற்றைப் பயன்படுத்தி குடியிருப்புக்கள் மற்றும் கடைகளில் இருந்து விரைவாக குப்பைகளை சேகரித்து, உடனுக்குடன் குப்பை லாரிகளில் ஏற்றி வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டுச் சென்று குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யபடும். இதனால் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களின் பணி எளிதாவதுடன், குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அகற்றப்படும். என தெரிவித்த நிலையில் சுமார் 25 இலட்சம் மதிப்புடைய இந்த ஆட்டோக்கள் இரண்டே ஆண்டுளில் குப்பை குழியில் காட்சிப் பொருளாக மாறி உள்ளதாக
இது அதிர்ச்சி அளிப்பதாகவும் அதிருப்தி அளிப்பதாகவும் வேதனை அளிப்பதாகவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டுகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக