காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 ஜூன், 2025

காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு


காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு....


கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் முதற்கட்டமாக சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 167.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன், தலைமை பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர்கள் செந்தில்குமரன் (மத்தியம்) ,துரைமுருகன் (மேற்கு) மற்றும் மாநகராட்சி  அலுவலர்கள் உள்ளனர்.


தமிழககுரல்  இணையதளச் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad